Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் பள்ளி மாணவர்களுக்கான நிதியியல் கல்வி முகாம்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (17:05 IST)
கரூர் அருகே பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் அரசு பள்ளியில் நிதியியல்  கல்வி முகாம் – மாணவ, மாணவர்களுக்கு சேமிப்பின் முக்கியதுவம் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம்.


 

 
கரூர் அருகே பாங்க் ஆப் பரோடோ வங்கியின் 109 வது துவக்க நாள் விழாவையொட்டி பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில்   நிதியியல் கல்வி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் அனைவரையும் வரவேற்றார். 
 
மேலும் இந்நிகழ்ச்சியில் பாங்க் ஆப் பரோடாவின் முதன்மை மேலாளர் வி. ஸ்ரீ ஹரி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்ததோடு, அவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கினார். வங்கியின் மாணவ மாணவிகள் மத்தியில் பேசிய வங்கியின் கரூர் கிளை துணை மேலாளர் மு.லெனின்.,  படிக்கும் காலத்தில் சேமிப்பு மிக முக்கியமானது என்றார். 
 
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ஒய்வு பெற்ற சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு. வங்கிகளின் முக்கியதுவத்தை பற்றி பேசினார். மேலும் வங்கி அதிகாரிகள்.. மாணவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் சலுகைகள் பற்றியும் எடுத்துக்கூறினர்.  மேலும் வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும் எடுத்துக்கூறினார்கள். 
 
மேலும் மாணவர்களின் வங்கி குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இறுதியில் மாணவ மாணவிகளுக்கு  நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட அளவில் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வங்கியில் சேமிப்பு குறித்து விளக்கவுரையாற்றிய நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments