ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. அதிமுக வேட்பாளர் யார்?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (11:49 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி பிப்ரவரி 7ஆம் தேதி என்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி எட்டாம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் வேட்புமனு  தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி மற்றும் பாஜக வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி இன்று வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments