Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்து மதம்’ குறித்து பேசினால்... ’பெண் சிங்கங்கள்’ சாட்டை அடி கொடுக்கணும் - எஸ்.ஆர். சேகர்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (16:09 IST)
இந்து மதத்தை தூற்றுபவர்களுக்கு இதேபோன்று பெண் சிங்கங்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் என  தமிழக பாஜக பொருளாளர்   எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.

இந்து மதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி ரகுராம் திருமாவை இழிவாக பேசி தனது ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் விசிகவினருக்கும், காயத்ரி ரகுராமுக்குமிடையே கருத்து மோதல் எழுந்தது. விசிகவினர் காயத்ரி வீட்டு வாசலில் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஆனால், இதற்கெல்லாம் தான் அஞ்ச போவதில்லை என காயத்ரி தெரிவித்திருந்த நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை கூட்டத்திற்காக டெல்லி சென்ற திருமா விசிகவினருக்கு வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் ”மோடி போன்ற பெரிய சக்திகளை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த சின்ன பதர்களை கணக்கில் கொள்ளாதீர்கள். குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில். அதை அவர்கள் கலை என்றும் சொல்லலாம். இதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று பேசியுள்ளார்.
 
அவர் அதில் காயத்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தாலும் அவரது பேச்சு ஒட்டுமொத்தமாய் நடிப்பு தொழிலில் இருக்கும் பெண்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. பல்வேறு மகளிர் அமைப்புகள் திருமாவின் இந்த பேச்சை கண்டித்துள்ளன
 
இந்நிலையில், தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இதுகுறித்து கூறியுள்ளதாவது ;
நடிகை காயத்ரி ரகுராமுக்கு சல்யூட். இந்து மதத்தை தூற்றுபவர்களுக்கு இதேபோன்று பெண் சிங்கங்கள் சாட்டையடி கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments