Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிகர் சங்க பேரமைப்பு "விடுதலை முழக்க மாநாட்டில், கலந்து கொண்ட கவி பேராசு வைரமுத்து பேட்டி ....

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (07:45 IST)
மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது.
 
இதில்,கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கூறுகையில்: 
 
இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லி விட்டேன்.
 
எம்.எஸ்.வி .யா, கண்ணதாசனா என்ற கேள்விக்கு:
 
உடலா ,உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். எம் .எஸ். வி. உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார்.
 
உடலும் ,உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது.
இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசும் மாநில அரசும் பரிசீலனை செய்யும் என்று நான் நம்புகிறேன்.
 
வணிகர்கள் தான் ஒரு சமூகத்தின் இரத்த ஓட்டம்.
 
வணிகர்கள் தான் பல்வேறு இடங்களில் விளையும் பொருட்களை நமது வீட்டுக்குள் கொண்டு வந்து உதிரத்தில் சேர்க்கிறார்கள்.
 
வணிகர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அரிய வால் நட்சத்திரம்? இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும்?

பயணிகள் குறைவாக இருந்தாலும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகளை நடும் நிகழ்ச்சியினை வனத்துறை அமைச்சர் பொன்முடி பனை விதை மற்றும் பணங்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.....

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு....

அடுத்த கட்டுரையில்
Show comments