Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (18:01 IST)
மணல் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தையும் மகனும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுப்பட்டனர்.
 


 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதி மலையப்பநகரில் வசிப்பவர் நல்லதம்பி(52), இவருடைய மகன் கிருபாகரன்(22) இருவரும் வாரச்சந்தையில் கறுவாடு விற்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகத்தின் அருகே திருக்காம்புலியூர் சென்ற போது மணல் அள்ள சென்ற லாரி கட்டுப்பாட்டை இழுந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் விபத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments