Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம்- விவசாயிகள் சங்கம்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:26 IST)
பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகிறது. தமிழ் நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற விலையில் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டுமென்று பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பால்உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும், என்று  விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மானிய கோரிக்கையின்போது கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென்று சின்னசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில், அமைச்சர் ஐ பெரியசாமி, ‘’பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொடர்பாக விரைவில் தீர்வு வரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments