Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வி !

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:33 IST)
டெல்லியில் தொடர்ந்து 44 -வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். இன்று  விவசாயிகள் 8 ஆம் கட்டமாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 44 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். நேற்று டெல்லி  ராஜ்பவனை நோக்க்கி டிராக்டர் பேரணியும் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. பேச்சுவார்த்தையின் துவக்கத்திலேயே விவசாயிகள் 3 சட்டங்களை நீக்க வேண்டும் என கூறினர்.

ஆனால் எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம், இச்சட்டங்களை நீக்கமுடியாது. ஆனால் சில திருத்தங்கள் செய்யவுள்ளதாகக்  மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை விவசாயிகளுடன் நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments