Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு கைது:தமிழக அரசு அதிரடி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (14:39 IST)
நேற்று கமல்ஹாசனை சந்தித்து வீரவாள் மற்றும் ஏர் கலப்பை பரிசளித்த விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். அவர் இன்று சென்னையில் திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சட்டசபை வளாகத்திற்கு சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் போலீசாரை மீறி உள்ளே செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டார்.
 
அய்யாக்கண்ணு கைது குறித்து திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் - அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாத வடபழனி பகுதிகளில் அய்யாக்கண்ணு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும்,  அதன் காரணமாகவே அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
 
சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்க்க வந்ததற்காக அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் முதல்வர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் 4 மணி வரை மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments