Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ரவுடியுடன் தொடர்பில் இருந்த முன்னணி நடிகை: வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

பிரபல ரவுடியுடன் தொடர்பில் இருந்த முன்னணி நடிகை: வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2016 (14:54 IST)
ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நக்சலைட்டாக இருந்து, ரவுடி கும்பல் தலைவனாக மாறிய நயீம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்நிலையில் சில ஆண்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வந்து முன்னணி நடிகையாக இருந்த, இப்பொழுதும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் அந்த ரவுடியுடன் பல வருடங்களுக்கு முன்னதாக தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த தமிழ் முன்னணி நடிகை சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். அப்போது இந்த நடிகையின் மூலம் ஹைதராபாத்தில் உள்ள பல முக்கிய தொழில் அதிபர்கள், பணம் உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களை மிரட்டி வசூல் செய்துள்ளார் அந்த ரவுடி.
 
நடிகையை படத்தில் நடிக்க புக் செய்பவர்களையும் மிரட்டி பணம் வசூல் செய்துள்ளார். இவர்களுக்கு இடையேயான இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்தில்  நடிகையை எந்த படத்திலும் நடிக்க கூடாது உனக்கு மொத்தமாக எவ்வளவு பணம் வேண்டும் என மிரட்ட ஆரம்பித்த பின்னர் தான் அந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி பின்னர் இந்தி சினிமாவில் முயற்சி செய்து அங்கு பெரிய அளவில் நிலைத்து நிற்க முடியாமல் தற்போது அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு முன்னணி நடிகை என்ற பெயருடன் இருந்து வருகிறார்.
 
தற்போது அந்த ரவுடி காவல்துறையின் நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால், அவர் நடிகையுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்து வந்ததும், அவர் மூலம் முக்கிய நபர்களிடம் வசூல் செய்ததும் தெரிய வந்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments