Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரின் மனைவி வேலைக்காரியான பரிதாபம்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:31 IST)
பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களின் மனைவி இன்று சாதாரண வேலைக்காரியாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

இசைஞானி இளையராஜா அவர்கள் பிஸியாக இருந்த காலகட்டத்தில், புதுவரவாக சினிமா இசைத் துறைக்குள் நுழைந்தவர் சந்திரபோஸ். எப்படி இளையராஜா அவர்களின் பெயரைத் தாங்கி பதாகைகள் வந்ததுபோல, சந்திரபோஸ் அவர்களின் பெயர் தாங்கியும் பதாகைகள் வெளிவந்தன.

குறிப்பாக ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த மிகப்பெரிய திரைப்படங்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்தார். ரஜினிகாந்த் நடித்த மனிதன், ராஜா சின்ன ரோஜா, விஜயகாந்த் நடித்த மாநகர காவல், நல்லவன், சத்தியராஜ் நடித்த விடுதலை, மக்கள் என் பக்கம், அர்ஜுன் நடிப்பில் வெளியான சங்கர் குரு, தாய் மேல் ஆணை உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர்.

பிறகு நிம்மதி உங்கள் சாய்ஸ், மங்கை, சொந்தம், கலாட்டா குடும்பம், டே இட் ஈஸ் வாழ்க்கை உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 6 வருடங்களுக்கு முன் இறந்துபோன சந்திரபோஸ் அவர்களுக்கு, இரண்டு மனைவிகள். இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மகன் கீபோர்டு வாசிப்பவராக உள்ளார். இந்நிலையில், சந்திரபோஸின் மனைவிகள் இருவரும் வீட்டு வேலை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெரும் இசை கலைஞனின் வாழ்க்கைக்குப் பின் இவ்வளவு கொடூரம் நடந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments