Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப ஆட்சி மீண்டு வரக்கூடாது: திமுக வுக்கு எதிராக சோ

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (13:33 IST)
துக்ளக் பத்திரிக்கையின் 46 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த ஆட்சி மீண்டும்வரக்கூடாது என கூறினார்.


 
 
மேலும் அதிமுக ஆட்சியில் குறைகளை விட நிறைகள் அதிகமாக உள்ளன. சட்டம் ஒழுங்கில் சில குறைகள் உள்ளன. யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாகளிக்க வேண்டும் என்றார் சோ.
 
முதல்வர் ஜெயலலிதா மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசுடன் போராடி பெற்று தருகிறார். முல்லை பெரியாறு அணை பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்றவற்றில் சட்ட ரீதியாக போராடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழகத்துக்கு ஆதரவாக பெற்றுத் தந்தார். இது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை.
 
வாக்குகளை சிதறடிக்காமல் யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தினார். திமுக உயிர் பெறுவதை யார் தடுக்கக்கூடிய இடத்தில இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். அவர்கள் திமுக மீண்டும் உயிர் பெற விடக்கூடாது எனவும் விழாவில் சோ பேசினார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்.. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சிக்கல்..!

Show comments