தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஆகிறார் தினகரன்?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (00:40 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. மேலும் இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பும் சாதகமாக  வந்துள்ளதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்

ஆனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகளின்படி பார்த்தால் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பில் 36% தினகரனுக்கும் 28% மதுசூதனனுக்கும் 18%  திமுகவுக்கும் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் இரட்டை இலை, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான திமுக ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளரை ஒரு சுயேட்சை வேட்பாளர் தோற்கடித்தார் என்றால் தமிழக அரசியலில் நிச்சயம் திருப்புமுனை ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது.. ஜாமீன் மறுப்பால் சிறையில் அடைப்பு..!

இன்ஸ்டாவில் பழக்கம்!.. அடிக்கடி உல்லாசம்!. 2வது கணவரை வீட்டு ஓடிய பெண்!...

உண்மையா? AI வீடியோவா.. 'காப்ஸ்யூல்' போட்டால் உடனடியாக கிடைக்கும் மேகி நூடுல்ஸ்..!

ஏண்டா இந்தியா வந்தோம்.. நொந்து நூலான மெஸ்ஸி.. மோசமான நிகழ்ச்சி ஏற்பட்டால் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments