விஜயகாந்தை விசாரிக்க தடை - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (23:23 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 5 மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திண்டுக்கல், சிவகங்கை, நாகர்கோவில், தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
 
தன் மீது போடப்பட்ட வழக்குள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்றும், எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், இதனால் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி 5 மாவட்டங்களில் விஜயகாந்த் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தடை விதித்ததோடு, மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments