Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்? - அதிர்ச்சியில் எடப்பாடி

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (10:49 IST)
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு  ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து கூறியதாகவும், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அதிர்ச்சியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி பக்கம் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் தாவி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், 24ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகி தினகரனே வெற்றி பெறுவார் என்பது உறுதியான பின்பு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தாராம். அதில் சிலர் போனை எடுக்கவில்லை. சிலரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனால்  டென்ஷனான எடப்பாடி, உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க சொன்னாராம். 

 
அதில், 4 அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களிடம் பூச்செண்டு கொடுத்து அனுப்பி, தினகரனுக்கு வாழ்த்து கூறியது தெரிய வந்ததாம். இதுகேட்டு அதிர்ச்சியான எடப்பாடி, உடனடியாக ஓ.பி.எஸ்-ஐ தொடர்பு கொண்டு இதுபற்றி விவாதித்துள்ளார். இப்படியே விட்டால் சரி வராது. தினகரன் பக்கம் உள்ள நிர்வாகிகளை உடனடியாக நீக்குவோம். அப்போதுதான் நம் மீது பயம் வரும் முடிவு செய்யப்பட்டதாம்.
 
அதன் விளைவாகவே, நேற்று கூடிய கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கலைராஜன், ரங்கசாமி உள்ளிட்ட சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments