வேற வழி இல்ல.. பக்கத்துல உக்காருவோம்! – ஓ.பன்னீர்செல்வம் அருகில் எடப்பாடியார்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (10:31 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அருகே எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.

அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவிய நிலையில் அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பொதுக்குழுவின் முடிவை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் இன்னமும் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட்டு வருகிறார்.

கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தின்போது துணை எதிர்கட்சி தலைவர் என்ற பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டதாக சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனாலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்தார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டிஸிலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் குறிப்பிடப்பட்டதால் அந்த கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பியது.

ஆனால் இந்த முறையும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வமே இடம்பெற்றுள்ளார். எனினும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் அருகே அமர்ந்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments