Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேறு ஒருவருடன் நிச்சயம்: காதலியை குத்திக்கொன்ற காதலன்

வேறு ஒருவருடன் நிச்சயம்: காதலியை குத்திக்கொன்ற காதலன்
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (00:03 IST)
தனது காதலி வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த காதலன் காதலியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷகில். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். அன்னுர் தென்னம்பாளையம் ரோடு, ஜி.கே.எஸ். பில்டிங் பின்புறம் குடியிருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் - சாரதா தம்பதியின் மகள் தன்யா.
 
ஷகில், தன்யா வீட்டருகே குடியிருந்து வருவதால், தன்யாவை ஒருதலையாக விரும்பியுள்ளார். இந்நிலையில் தன்யாவுக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
 
ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் புதன்கிழமை காலை மணமக்கள் இருவரும் சென்றுள்ளனர். அங்கு ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டுள்ளனர்.
 
ஷகிலும் ஓணம் பண்டிகையொட்டி இவரும் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது காலையில் திருமணமாக உள்ள இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதை நேரில் பார்த்துள்ளார்.
 
தன்யாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ஷகில், தன்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, தன்யா வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்திவிட்டு ஷகில் தப்பியுள்ளார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் எய்ட்ஸ்: கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி