Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (18:21 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி அடைந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 
19 சுற்றுகளாக நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 
இவர்களை தொடர்ந்து நாம் தமிழர், பாஜக அடுத்தடுத்து இடத்தில் உள்ளனர். நோட்டாவில் பதிவான வாக்குகளை விட பாஜக மிக குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். ஆளும் கட்சி எதிர்பாராத தோல்வி சந்தித்துள்ளது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் திமுகவிற்கு தோல்வி இல்லை, தேர்தல் ஆணையத்திற்குதான் தோல்வி. வாக்காளர்களுக்கு பணம் வாரி வழங்கப்பட்டதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது.
 
இவ்வாறு தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments