Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தகப் பறிமுதல் சர்ச்சை – காவலர்கள் மீது நடவடிக்கை ?

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (10:22 IST)
ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தகத்தைப் பறிமுதல் செய்த காவல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரஃபேல் ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் கூட்டங்களில் எல்லாம் ரஃபேல் ஊழல் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஆனால் பாஜகவும் மோடியும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான விதிமுறை மீறலோ அல்லது ஊழலோ நடைபெறவில்லை என மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ் விஜயன் எழுதிய ’நாட்டை உலுக்கும் ரஃபேல் ஊழல்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா மார்ச் 2 அன்று மாலை 6.30 மணிக்கு நடக்க இருந்தது. இந்த புத்தகத்தை இந்து என்.ராம் அவர்கள் வெளியிட இருந்தார் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாகக் கூறி புத்தகத்தை வெளியிட இருந்த பாரதி புத்தாகலய கடைக்கு சென்ற தமிழகக் காவல்துறையினர் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறக் கூடாது எனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அள்ளிச்சென்றனர்.

ஆனால் இதுபற்றிக் கேட்டபோது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புத்தகத்திற்கு தேர்தல் ஆணையம் சார்பில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை எனவும் கூறினார். உடனடியாக புத்தகங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் இது சம்மந்தமாக விரிவான அறிக்கை அளிக்க வேண்டுமெனவும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன் விளைவாக புத்தகத்தைப் பறிமுதல் செய்த 4 காவல் அதிகாரிகளும் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும் தங்கள் செயலுகு விளக்கமளிக்க வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments