Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயம் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

J.Durai
திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பிரபுநாதன் என்பவரின் இல்ல விழா, மெய்யணம்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்த இல்லவிழாவிற்காக அன்னம்பாரிபட்டியிலிருந்து தாய்மாமனான வைரமுத்து என்பவரது தலைமையில் பட்டாசு வெடித்த வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.
 
கருப்புக் கோவில் அருகில் இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, பட்டாசு ஊர்வலத்திற்குள் வெடித்தில் ஊர்வலத்தில் வந்த இரு சிறுமிகள் உள்பட சத்யா, செல்வி, நித்யா, சானியா, பூங்கனி, திலகவதி, வைரசிலை என்ற 8 பேர் படுகாயமடைந்தனர்.
 
அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த மற்றும் வெடித்தவுடன் பெண்கள் பதறி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., 
 
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இல்ல விழா நடத்தியவர்கள், பட்டாசு வெடித்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments