Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திராவிட மாடல் ஆட்சியில் கல்வித்தரத்தில் உயர்ந்த தமிழ்நாடு - அரசு அறிக்கை

Stalin Assembly

Mahendran

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:21 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் கல்வித்தரத்தில் உயர்ந்த தமிழ்நாடு என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
 
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ₹1086 கோடியில் 614 பள்ளிகளில் 3238 வகுப்பறைகள், 21 ஆய்வகங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு
 
₹551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள். ₹436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பு
 
20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் திட்டங்களால் கல்வித்தரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது
 
ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை தர வரிசையில் (NIRF) அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலிடம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14,227 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 100 கோடியே 54 லட்சம் வங்கி கடன் - அமைச்சர் கே.என்.நேரு வாங்கினார்....