Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் நீரை விட பீருக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Mahendran
சனி, 4 மே 2024 (16:30 IST)
திமுக ஆட்சியில் நீரை விட பீருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் திமுக ஆட்சி எப்போது வந்ததோ அப்போதிலிருந்து மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்றும் ஈபிஎஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஏனென்றால் மதுவில் தான் அதிக வருமானம் வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்

அதிமுக ஆட்சியில் தொடங்கிய காரணத்தினால் தான் சில நீர்வள திட்டங்களை திமுக அரசு கைவிட்டது என்றும் தற்போது வறட்சிக்கு அது தான் காரணம் என்று இபிஎஸ் குற்றம் சாட்டு தெரிவித்தார். குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் மீதம் இருக்கும் பதினைந்து சதவீத பணிகளை முடிக்காமல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர் என்றும் அதனால் தான் தமிழ்நாடு வறட்சியால் தத்தளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்

புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக பொய் சொல்கின்றனர் என்றும் மின்சார பேருந்துகளுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் தான் 14500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன என்றும் பழைய பேருந்துகள் சீரமைப்பது மட்டுமே திமுக செய்து வருகிறது என்றும் அரசு பேருந்துகளில் பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments