Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்லை இங்கே காட்டி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் போய் காட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமி

Siva
திங்கள், 25 மார்ச் 2024 (08:48 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அதேபோல் அவர் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதியின் செங்கல் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செங்கலை இங்கே காட்டி என்ன பயன்? நாடாளுமன்றத்தில் போய் காட்ட வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
 
தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் இது பற்றி உங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி இருப்பார்கள், ஆனால் அங்கே பேசாமல் இங்கே செங்கலை காட்டி என்ன பயன் நாடாளுமன்றத்தில் செங்கலை எடுத்துச் சென்று கொண்டு காட்டுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்-திமுக அரசு தான் என்றும், ஆனால் 7.5 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள் ஒதுக்கீடு செய்தது நாங்கள் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ALSO READ: பெளர்ணமி அன்று திருச்செந்தூர் கடற்கரையில் தங்க வேண்டுமா? இணையத்தில் பரவும் தகவல்..!


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல்காந்திதான் என்னை தள்ளிவிட்டார்.. மண்டை உடைந்த பாஜக எம்.பி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற களேபரம்!

24 வயது இளம்பெண்ணை கடித்து குதறிய சிறுத்தை.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

கேரள முதல்வருடன் கைகுலுக்க தெரிந்த ஸ்டாலினுக்கு இதை செய்ய திராணியில்லையா? ஈபிஎஸ் ஆவேசம்

ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் 1,000 ரூபாய் அபராதம்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. 2 ராணுவ வீரர்கள் காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments