Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''எடப்பாடி பழனிசாமி நன்றி மறந்துவிட்டார்'' - ஹெச்.ராஜா

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (21:13 IST)
''எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி   நன்றி மறந்துவிட்டார்'' என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அதிமுக,பாஜக இடையே சமீபத்தில் கருத்து மோதல் அதிகரித்து வந்த நிலையில், அதிமுக பாஜக கூடணியில் விரிசல் ஏற்பட்டது. எனவே  சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் இன்று  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள், பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இத நிலையில்,  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி   நன்றி மறந்துவிட்டார். அதிமுகவில் இருந்து விலகியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது அதிமுகவிற்குத்தான் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments