Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. வீட்டை திறக்க முடியாது என கூறிய பொன்முடி வீட்டின் காவலாளி..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (09:17 IST)
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் விழுப்புரத்தில் உள்ள பொன்முடி வீடு பூட்டி இருந்ததாகவும் அதை திறக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலாளியை கூறிய போது திறக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்த நிலையில் இன்று  எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்  பெங்களூரு செல்லும் நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை திறக்க கூறிய போது, திறக்க முடியாது என்ற காவலாளி கூறியதாகவும் அதன் பின்னர் நடந்த சமாதான பேச்சு வார்த்தையை அடுத்து காவலாளி வீட்டை திறந்ததாகவும் தற்போது அந்த வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

அடுத்த கட்டுரையில்
Show comments