Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ராணுவ படையுடன் சென்று மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை..!கரூரில் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (13:41 IST)
கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ராணுவ படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
6 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சோதனையின் முடிவில் அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மணல் குவாரியில் நடந்த  சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 நாட்களாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments