Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால அவகாசம் கிடையாது! இன்றே கடைசி! – செந்தில் பாலாஜி வேண்டுகோள்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (12:30 IST)
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இணைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. ஆன்லைன் மூலம் எளிதாக இணைத்து கொள்ளும் வகையில் வசதி அளிக்கப்பட்டது.

என்றபோதிலும் மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. முன்னதாக இருமுறை இந்த இணைப்பு பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15ம் தேதியே கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி “தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

அடுத்த கட்டுரையில்
Show comments