Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறுவது இயல்பு தான்: துரைமுருகன் பேட்டி

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:02 IST)
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அதிமுக மற்றும் திமுக கட்சிகள் நடத்தி வருகின்றன
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா? என்ற சந்தேகம் இரு அணிகளிலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணி தொடருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் பாமக, திமுக கூட்டணிக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக தனி கூட்டணியை அமைக்க 
இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ’தமிழகத்தில் ஒரு கூட்டணியில் இருந்து வேறு கூட்டணிக்கு தேர்தல் நேரத்தில் கட்சிகள் இடம் மாறுவது வழக்கமான ஒன்றுதான் என்று அவர் கூறினார். சட்டசபை தேர்தலை பொறுத்த வரை வேட்பு மனுக்கள் வாபஸ் முடிந்தால் தான் யார் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments