Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு முக்கிய ரயில்கள் ரத்து! தென்னக ரயில்வே அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 16 ஜூலை 2024 (12:48 IST)
ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக 10 நாட்களுக்கு  முக்கிய ரயில்கள் ரத்து! என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. எனவே தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில்  (20691)  ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில்  - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை ரத்து செய்யப்படுகிறது
 
அதேபோல் ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகானிரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (22632) சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் பெரம்பூரில் இறங்கி கொள்ளலாம்.
 
ஜூலை 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் (22535) ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் ( 22613) ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும். 
 
ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில்(12606) மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684) ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாமரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் ( 20683) விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
 
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும்
 
இவ்வாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

நேற்று அதானியால் சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தென் தமிழகத்தில் 25, 27 தேதிகளில் கனமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பக்தர்கள் கொடுத்த 227 கிலோ தங்கம்.. மத்திய அரசிடம் முதலீடு செய்யும் சபரிமலை தேவஸ்தானம்..!

காலிஸ்தான் ஆதரவாளர்களை நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து எச்சரிக்கை.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments