Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:58 IST)
அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது வனத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்த சிறுத்தை அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளதாக சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

இதனை அடுத்து சிறுத்தை நடமாட்டம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீரென விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்

மேலும் இது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிறுத்தையா அல்லது புதிய சிறுத்தையா என்ற என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீட்டிற்கு பத்திரமாக சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments