Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (16:00 IST)
சென்னையில் செல்போன் ஆப் மூலமாக போதை மருந்து விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும் அவ்வப்போது போதை பொருள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை விட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் மாத்திரை வடிவில் போதை பொருள் விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 
 
சென்னை கொருக்குப்பேட்டையில் செல்போன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கணேஷ், ராஜேஷ், ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மேலும் பத்து அட்டை 4500 ரூபாய்க்கு வாங்கி ஒரு அட்டை 2000 ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்ததாகவும் இதன் மூலம் அதிக பணம் லாபம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
இந்த போதை பொருள் அட்டைகளை எங்கிருந்து அவர்கள் வாங்கினார்கள்? யாருக்கு விற்பனை செய்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

நிலநடுக்கம் ஏற்படும் என கூறிய டிக்டாக் ஜோதிடர் கைது..

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments