Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மருந்துகடைகள் இயங்காது

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (05:00 IST)
இன்று முதல் இந்தியா முழுவதும் ஒரு நாள் மருந்து கடைகள் இயங்காது என மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கத்தின்  மாநில தலைவர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்ய வலியுறுத்தி அக்டோபர் 14 ஆம் தேதி திட்டமிட்டபடி தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் முடப்படும்.
 
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. அது போன்று அனுமதி அளித்தால், போலி மருந்துகளின் விற்பனைஅதிகரிக்கும். ஊக்கமருந்து, கருத்தடை மருந்து உள்ளிட்ட மருந்துகளும் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
எனவே, ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்க கோரி அக்டோபர் 14ஆம் தேதி, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கம் பங்கு பெருகிறது. இந்த போராட்டம் காரணமாக, தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் மருந்து கடைகள் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் இயங்காது என தெரிவித்தார்.
 
 

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments