பிரபல நடிகையின் காரில் மதுபாட்டில்கள்…ஓட்டுநர் கைது !

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (15:17 IST)
தென்னிந்திய திரைப்படத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன். இவரது காரில் மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் மதுபானம் கடைகளை  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மதுபானம் வாங்கி வருவதைத் தடுக்கும் வகையில் போலீஸார் சோதனைச் சாவடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் போலீஸார், அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ய வேண்டுன் என் கூறியுள்ளனர்.

அப்போது காரில் இருந்த நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் சோதனை செய்ய அனுமதியளித்துள்ளதாக தெரிகிறது.

போலீஸாரின் சோதனையில் 96 பீர்பாட்டில்கள்,8 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. இதுகுறித்து வானத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளானர்.

பின்னர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் செல்வக்குமாரை பிணையில் அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

அடுத்த கட்டுரையில்
Show comments