Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்: சட்டக்கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது!

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (07:14 IST)
சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சட்ட கல்லூரி மாணவி, அவருடைய கணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து நிறுத்தும் இடம் அருகே நிறுத்திருந்த ஜீப் மீது பேருந்து உரசி உள்ளது. உடனே அதிலிருந்து நான்கு பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதம் செய்து அதன் பின்னர் திடீரென சரமாரியாக தாக்கி உள்ளனர்.
 
உடனே அந்த வழியாக வந்த பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கி விட்டு காரில் தப்பிய சட்ட கல்லூரி மாணவி உள்பட அவரைச் சார்ந்தவர்களை தேடினர்.
 
ஒரு சில நிமிடங்களில் அவர்கள் பிடிபட்டதை அடுத்து சட்ட கல்லூரி மாணவி அவரது கணவர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக சென்னை குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வெளியானது Realme 14x 5G! சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!

காங்கிரஸ் கட்சி தான் அம்பேத்கருக்கு எதிரானது: சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பிரதமர் மோடி

’விடுதலை 2’ படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனத்தை நீக்குவதா? வன்னி அரசு கண்டனம்..

பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது: துணை முதல்வர் உதயநிதி

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments