Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கே இருக்கீங்க மேயர் சைதை துரைசாமி? மா.சு. கேள்வி

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (03:12 IST)
சென்னையில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனை குறித்து விவரம் தெரியாமல், சென்னை மேயர் சைதை துரைசாமி பேசுவதைப் பார்த்தால், அவர் சென்னையில்தான் உள்ளாரா? அல்லது அயல்நாட்டில் உள்ளாரா? என எண்ணத் தோன்றுகிறது என்று முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டில் நிலவிய குடிநீர் பிரச்சனை தற்போது நிலவுகிறது எனச் சென்னை குடிநீர் வாரியமே அறிவித்துள்ளது.
 
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் குடம் தண்ணீர் ரூபாய் 6-க்கு விற்கப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, குடிநீர் பிரச்சனை இல்லை என்று சென்னை மோயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அது, என்னவென்றால், சென்னை மேயர் சைதை துரைசாமி சென்னையில் தான் உள்ளாரா? அல்லது அயல்நாட்டில் உள்ளாரா? என்று.
 
சென்னைக்கு நாளொன்றுக்கு 83 கோடியே 4 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் நிலையில் 62 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. பற்றாக்குறையாக 21 கோடி லிட்டர் தண்ணீர் உள்ளது.
 
எனவே, உண்மையை அறிந்து புரிந்து, சென்னை மேயர் சைதை துரைசாமி பேச வேண்டும். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது உயர்ந்த பொறுப்பிலே உள்ளவர்களுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார். 
 

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments