அது கூடவே கூடாது.. கட்சி தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டாக்டர் ராமதாஸ்..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (13:33 IST)
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாலைகள் யாருக்கும் அறிவிக்க கூடாது என கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கட்சியின் நிகழ்ச்சிகளில் யாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டாம் என கூறியிருந்தார் என்பதும் இந்த முறை பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாலை அணிவிக்கும் கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதனை அடுத்து கட்சி தொண்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இருப்பதாவது:
 
மாலைகளுக்கு  இடம் தரக்கூடாது! பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில்  மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது.  அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments