Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரன் காடுவெட்டி குருவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்: டாக்டர் ராமதாஸ்..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (10:51 IST)
மாவீரன் ஜெ.குருவின்  வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
வாழும் வரையிலும், வாழ்க்கையை நிறைவு செய்த பிறகும் என்னிடமிருந்து பிரிக்க முடியாத மாவீரனின் ஐந்தாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அவனை நான் மறந்தால் தானே இந்த நாளில் நினைவு கூற முடியும். அவன் எந்நாளும்  என் நெஞ்சில் குடியிருக்கிறான்.   
 
கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும்  நெஞ்சில் நிறுத்தி, இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் போற்றுவோம்.
 
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments