இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்த ராமதாஸ்..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (07:32 IST)
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?
 
குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு. 
 
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது  பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே, ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள்  14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
 
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு...
 
திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு  'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.
 
அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.
 
இப்போது சொல்லுங்கள்....
 
இதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா?
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்