Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5 லட்சம் வாங்கவில்லை - அந்தர் பல்டி அடித்த அப்போலோ மருத்துவர்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (16:25 IST)
தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என அப்போலோ மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.


 

 
சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆர்.கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
 
அதில், 2016 நவம்பர் 1-ஆம் தேதி மருத்துவர் பாலாஜிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல் இருந்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை பதிவு செய்தது டாக்டர் பாலாஜி என்பதால், அதற்காகத்தான் அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 
 
மேலும், பணம் வாங்கியது உண்மைதான் என டாக்டர் பாலாஜி ஒத்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது டாக்டர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜெயலலிதாவின் கை ரேகையை பதிவு செய்வதற்காக நான் யாரிடம் பணம் பெறவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ரூ.5 லட்சம் வாங்கியதாக நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை. எனவே, செய்திகளில் வெளியான அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments