Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 23 முதல் அப்துல் கலாம் புத்தக திருவிழா

அக்டோபர் 23 முதல் அப்துல் கலாம் புத்தக திருவிழா
, வியாழன், 8 அக்டோபர் 2015 (05:59 IST)
அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை டாக்டர் அப்துல் கலாம் புத்தக திருவிழா, ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
 

 
இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
பபாசி எனும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, அக்டோபர் 23 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை, டாக்டர் அப்துல் கலாம் புத்தகத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்த உள்ளது.
 
இந்த புத்தக திருவிழா, தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை பொது மக்கள் வந்து புத்தங்களை வாங்கி பயன்பெறலாம்.
 
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்,  மாவட்டம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் 1.8 லட்சத்து மாணவர்கள் பயன் பெறும் வகையில் பிரசாரம் இருக்கும்.
 
மேலும், மாணவர்கள் பணத்தை சேமித்து, தாமாக முன்வந்து புத்தகம் வாங்கும் வகையில், இக்குழுவின் சார்பில் கடந்த ஜூலை மாதம் உண்டியல்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த 5 ஆம் தேதி முதல், புத்தகத் திருவிழா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கலைநிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த குழுக்கள், தினசரி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் அக்டோபர் 22 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil