Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. விவகாரத்தில் விஜயபாஸ்கரிடம் 5 லட்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார் மருத்துவர் பாலாஜி!

ஜெ. விவகாரத்தில் விஜயபாஸ்கரிடம் 5 லட்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார் மருத்துவர் பாலாஜி!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (12:35 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தனது கையெழுத்துக்கு பதிலாக கை ரேகை பதிவு செய்ததாக கூறப்பட்டது.


 
 
இதனை அப்பல்லோ மருத்துவர் பாலாஜி பதிவு செய்தார். ஆனால் தற்போது அவர் இதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் சசிகலா தரப்பு விஜயபாஸ்கரிடம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம், அப்பல்லோ மருத்துவருக்கு பணம் கொடுத்த ஆவணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
 
அதில், 2016 நவம்பர் 1-ஆம் தேதி மருத்துவர் பாலாஜிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல் இருந்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை பதிவு செய்தது டாக்டர் பாலாஜி என்பதால், அதற்காகத்தான் அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
 
இதற்கு விளக்கம் அளித்த டாக்டர் பாலாஜி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். ஆனால் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ரிச்சார்ட் பீலே தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தான் தங்குவார். அவர் நான்காவது முறையாக சென்னை வந்தபோது தனது குடும்பத்தினருடன் வந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார்.
 
அப்பல்லோ நிர்வாகம் அவரை ரெயிண்ட்ரீ ஹோட்டலில் தங்க அறிவுறுத்தியிருந்தது. ஆனால் அவர் குடும்பத்தினருடன் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார். நவம்பர் 2-ஆம் தேதி அவர் லண்டன் திரும்ப இருந்ததால் நவம்பர் 1-ஆம் தேதியே அவர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தை கட்ட வேண்டியிருந்தது.
 
ஆனால் அப்பல்லோ நிர்வாகம் அவரை ரெயிண்ட்ரீ ஹோட்டலில் தங்க சொல்லியிருந்தது, அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியதால் அந்த கட்டணத்தை செலுத்த முடியாது என கூறியது. இதனை நான் அமைச்சர் விஜயபாஸ்கரின் கவணத்துக்கு கொண்டு சென்றேன்.
 
அவர் உடனடியாக அவரது உதவியாளரிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் பில் 4 லட்சத்துக்கு 20 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு மீத தொகையை அவரது உதவியாளரே கொண்டு சென்றுவிட்டார். ஜெயலலிதாவின் ரேகையை பதிவு செய்ய நான் 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுவது பொய். அதில் உண்மை இல்லை என கூறினார் டாக்டர் பாலாஜி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments