Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட முதல் சண்டை எது தெரியுமா?

ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட முதல் சண்டை எது தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (08:10 IST)
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 1995 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு  பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டது.


 



அப்போது, சிவாஜி கணேசன் உடல் நலம் சரியில்லாததால், செவாலியர் விருதினை, பிரான்ஸ் நாட்டு தூதரே இந்தியா வந்து அவருக்கு கொடுத்தார். தமிழக அரசு, சார்பில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் அரசு அதிகாரிகள், முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு முன்பே, விருது பெறும் சிவாஜியை மேடையில் அமரவைத்துவிட்டு, பின், எல்லோரையும் முதல்வர் வரும்போது எழுந்து நிற்க சொல்லி, அந்த செவாலியர் விருது வழங்கும் விழாவை தமிழக அரசின் விருது வழங்கும் விழா போல நடத்தினர். இதனால், திரையுலக பிரமுகர்கள் கடுப்பானார்கள். அப்போது, பேசிய   ரஜினிகாந்த், மேடையிலேயே தைரியமாக ஜெயலலிதாவை குற்றம் சாட்டினார். அங்கே ஆரம்பித்தது, ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே முதல் சண்டை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments