பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா? ஆய்வு செய்ய இபிஎஸ் கோரிக்கை

Senthil Velan
சனி, 17 பிப்ரவரி 2024 (16:32 IST)
தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே  முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார்
 
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்று எடப்பாடி வலியுறுத்தி உள்ளார்.

ALSO READ: பட்டாசு ஆலை விபத்து - தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு..!
 
மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரண தொகை உடனடியாக வழங்கும்படி, இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதுடன், நான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments