Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (07:47 IST)
திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்: என்ன காரணம்?
திமுக செய்தி தொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இன்னும் ஒரு சில நாட்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள நிலையில் அவருக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உட்பட பல தலைவர்களும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்
 
அவரது சமூக வலைதள பதிவில் செய்யப்பட்டிருந்த விமர்சனம் திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments