Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டம்: திமுகவின் அடுத்த போராட்டம் திடீர் ஒத்திவைப்பு

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (21:12 IST)
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசு திணறி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை குடியிருப்பு திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் திமுக மிகத் தீவிரம் காட்டி வருகிறது. திமுக இளைஞரணி சார்பில் ஒரு போராட்டமும், திமுக சார்பில் ஒரு போராட்டமும், பின்னர் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒரு போராட்டமும் நடத்தி தமிழகத்தையே அதிரச் செய்தது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
 
இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து புதுச்சேரியில் வரும் 27ம் தேதி இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போராட்டம் திடீரென தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இரு கட்சிகளும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இதுகுறித்து கூறியபோது புதுச்சேரியில் உள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் பொங்கல் வியாபாரம் நடக்கும் நிலையில் போராட்டம் செய்தால் வியாபாரம் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே திமுகவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments