Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல்னு வந்துட்டா மானம் பாக்கக் கூடாது! – திமுக அமைச்சர் பேச்சு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (13:35 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில் மானம் பார்க்காமல் வாக்கு சேகரிக்க வேண்டும் என திமுக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாக உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் குறித்து பேசிய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் “தேர்தல் வந்துவிட்டால் ஈனம், மானம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாரையும் பிரித்து பார்க்காமல் எல்லாரிடமும் ஓட்டு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments