Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிடம் பணம் இல்லையாம்: சொல்கிறார் ஆற்காடு வீராசாமி

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (21:04 IST)
இந்தியாவின் பணக்கார கட்சிகளில் ஒன்று திமுக என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்களிடம் ரூ.100 கோடி பணம் இல்லை என்றும், இந்த பணம் மட்டும் தங்களிடம் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியை எப்பவோ கவிழ்த்திருப்போம் என்றும் முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்,.

மக்களின் விரோத அரசு அதிமுக அரசு என்று கூறும் திமுக, அந்த அரசை ஏன் கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஆற்காடு வீராசாமி, 'அதிமுகவிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏக்களை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நாங்கள் நினைத்திருந்தால் இந்த ஆட்சி எப்படி நீடிக்க முடியும். எங்களுக்கு பண வசதி இருந்தால் அதனை செய்து காட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

பணம் கொடுத்து ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு. தற்போதையை அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் எங்களை எங்கள் பக்கம் இழுத்தாலே போதும் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆனால் அதற்கு எங்கள் கட்சியில் பணம் இல்லை' என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments