Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டி சேலை எல்லாம் பழசு.. ஸ்மார்ட் வாட்ச் கொடுக்கும் திமுக.. ஈரோடு தேர்தல் களேபரம்..!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (19:31 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலில் பணம் புகுந்து விளையாடுகிறது என்று கூறப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பிருந்தே திமுக வாக்காளர்களுக்கு தினமும் 500 ரூபாய் பிரியாணி மற்றும் மது பாட்டில்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இன்னொரு பக்கம் அதிமுகவும் பணம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வேட்டி சேலை மூக்குத்தி குடம் போன்ற பொருள்கள் பரிசளித்து வந்த திமுக தற்போது ஸ்மார்ட் வாட்ச் பரிசளித்துள்ளதாகவும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் மதிப்பு ரூபாய் 8000 என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இதுவரை திமுக இந்த தேர்தலுக்காக சுமார் 150 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் இன்னும் அதிகமாக செலவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதே ரீதியில் சென்றால் தேர்தலே கேலிக்குத்தாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments