Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக - காங்கிரஸ் தலைவர்கள் : யாருக்கு எந்த தொகுதி?

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (13:47 IST)
தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வசந்தகுமார் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்று விட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ இறந்துவிட்டப்படியால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளனர்.
 
இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, நடைபெற இருந்த திமுகவில் பொதுக்குழுவின் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது காங்கிரஸ் கட்சி . இன்று,இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்த ஒருசில மணிநேரத்திலேயே திமுக தலைவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உட்பட அக்கட்சியைத் சேர்ந்த பலரும் திமுகவில் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர்.
 
தற்போது, இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. ஏற்கவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கன்னியாகுமரியில் எம்பியானதை அடுத்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் ராங்குநேரியில் போட்டுவதில் பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதுகுறித்து அவர்கள் முன்னர் தெரிவித்த பேச்சுக்களிலேயே தெரிந்தது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் திமுக பொதுக்குழுக் கூட்டத்தையே ஒத்திவைத்துள்ளனர்.
 
எனவே,காங்கிரஸ்- திமுக கட்சித் தலைவர்கள், இடைத்தேர்தல் தொகுதி குறித்து தொடர்ந்து பேசி வரும் நிலையில், இன்னும் சிறுது நேரத்தில் யாருக்கு எந்த தொகுதி என்பது தெரிந்துவிடும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments