Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பக்கம் பச்சை துரோகம், இன்னொரு பக்கம் வேளாண் மண்டல அறிவிப்பா? திமுக குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (07:15 IST)
ஒரு பக்கம் பச்சை துரோகம், இன்னொரு பக்கம் வேளாண் மண்டல அறிவிப்பா?
மத்திய அரசின் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு அளித்து கொண்டு ஒரு பக்கம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வரும் அதிமுக அரசு இன்னொரு பக்கம் விவசாயிகளை சமாதானப்படுத்த டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு மண்டல வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது கண்துடைப்பு என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது 
 
இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது ’காவிரி டெல்டா விவசாயிகளுக்கு அதிமுக அரசு பச்சை துரோகம் செய்துள்ளது. இந்த பச்சை துரோகத்தை திசை திருப்பவே காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
மத்திய அரசின் மீத்தேன் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் மறைமுகமாக ஆதரவு கொடுத்து கொண்டே மக்களின் கவனத்தை திசை திருப்ப இவ்வாறு வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாக கேஎன் நேரு அவர்கள் கூறியுள்ளார். முதல்வரின் வேளாண் மண்டல அறிவிப்புக்கு சீமான், டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் திமுக இந்த விஷயத்திலும் அதிமுக அரசை குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments