திமுகவில் இணைந்த சமக வேட்பாளர்..சரத்குமார் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (20:55 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமாரின் சமக ஐஜேகேயுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்தது.

இந்நிலையில், சமக வேட்பாளர் முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார்.  இது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த சமத்துவ கட்சி வேட்பாளர் முரளி கிருஷ்ணன் திமுகவில் இணைந்துள்ளார்.

மநீம கூட்டணியில் சமகவுக்கு 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் மூன்று தொகுதிகளை ஏற்கனவே சரத்குமார் திருப்பி அளித்தார். இந்நிலையில் தற்போது  ஒருவர் கட்சி மாறியதால் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments